கொழும்பில் 10 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
கொழும்பில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருட்கள் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெருமதியானது என முகத்துவாரம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் தயாரிப்பு
இதன்போது போதைப்பொருள் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.