நுவரெலியாவில் 500 கிலோ கேக் தயாரிப்பு - கிறிஸ்மஸ் தினத்தில் அரிய வாய்ப்பு!
நுவரெலியா - தனியார் நட்சத்திர விடுதியில் எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோகிராம் கேக் தயாரிக்கப்படும் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று(23.10.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த கேக், முந்திரி, திராட்சை, பிஸ்தா, பாதாம் போன்ற உலர்ந்த பொருட்களை கொண்டும் உயர் ரக மதுபானங்களை கொண்டு பிரமண்டமான 500 கிலோ கிறிஸ்மஸ் கேக் கலவை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன், கேக் தயாரிக்கும் நிகழ்வில், ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டின் சுற்றுலாப் பயணிகள் பலர் உற்சாகத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.
பொதுமக்களுக்கும் வாய்ப்பு
இதற்கமைய, நுவரெலியாவில் உள்ள 3 சுற்றுலா ஹோட்டல்களின் ஊழியர்களின் இசை வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பிக்கப்பட்டு, கேக் கலவைக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் சுமந்து நுவரெலியா பிரதான நகரை நடைபவனியாக சுற்றி வந்து நுவரெலியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிரகரி வாவி கரையோரத்தில் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தற்போது கலக்கப்படும் கேக் கலவை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் கலக்கப்பட்டு பதப்படுத்தப்படும் என்றும், டிசம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்பு முழுமையாக தயாரித்து முடிக்கப்படும் என்றும் டிசம்பர் மாதம்(24)ஆம் திகதி இரவு அனைவரும் ரசிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டு மிகவும் கோலாகலமாக வெட்டப்படும் என்றும், ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.



கனமழை மற்றும் மண்சரிவு எச்சரிக்கை! சுற்றுலாப் பயணங்களை தவிருங்கள்: அனர்த்த முகாமைத்துவ மையம் வேண்டுகோள்
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு