அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம்! - சஜித் அணியின் திட்டம்
அழிவில் இருந்து நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்து போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு திசைகளிலும் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 300,000 க்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார, தலைவர் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், ஹரின் பெர்னாண்டோ, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, மனுஷ நாணயக்கார, எஸ்.எம்.மரிக்கார், நளின் பண்டார, மயந்த திசாநாயக்க, மயந்தவு திசாநாயக்க ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.