மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் மூழ்கிய ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு (Photos)
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் நீரில் மூழ்கி தற்போது வரட்சியான காலநிலையில் வருடம் ஒரு முறை தோன்றும் ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
குறித்த பூஜையினை மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட மக்கள் இணைந்து நேற்று (23.04.2023) விஷேட அபிஷேகம் செய்து வழிபட்டதுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மவுஸ்சாக்கலை நீர் தேக்கம்
கடந்த 1969 ம் ஆண்டு இலங்கை நாட்டிற்கு மின்சார தேவைக்காக 95 ஆயிரம் ஹெக்டேர் தேயிலை தோட்டங்கள் அடங்கிய காணியில் இந்த மவுஸ்சாக்கலை நீர் தேக்கம் அமைக்கப்பட்டது.
இதனால் பல ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் தேயிலை தொழிற்சாலைகள் பௌத்த விகாரை இஸ்லாமிய பள்ளி கிறித்தவ தேவாலயம் மூன்று நகரங்கள் இரண்டு சினிமா கொட்டகைகள் 95 ஆயிரம் ஹெக்டேர் தேயிலை தோட்டங்கள் தொழிலாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்தும் நீரில் மூழ்கியது.
அதில் நீரில் மூழ்கிய மிகவும் சக்திவாய்ந்த ஆலயமாகவும் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாகவும் கருதப்படுவது மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலயம் ஆகும்.
அதனை சுற்றியுள்ள பௌத்த மற்றும் ஏனைய ஆலயங்களிலும் இன்று விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
113 வருட பழமையான ஆலயம்
இந்திய சிற்பிகளால் 1910 ஆண்டு யானையினை கொண்டு கருங்கற்களால் அமைக்கப்பட்ட குறித்த ஆலயம் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கின்றது.
பிரதேசவாசிகள் வேண்டுதல்களை நிறைவேற்றிய ஆலயமாக குறித்த ஆலயம் இருப்பதனால்
இன்றும் மக்கள் ஆலயம் தோன்றும் போதெல்லாம் வழிபடுவதனை வழக்கமாக
கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
