21 உள்ளூர் மூலிகை மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம்
சுமார் 21 உள்ளூர் மூலிகை மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முகக்கவசம், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் கட்டுப்பாடு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பெருங்காயம், கறுவாப்பட்டை, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, வெனிவேல்,கிராம்பு, இஞ்சி மற்றும் மூல மஞ்சள் உள்ளிட்ட 21 உள்ளூர் மூலிகை பொருட்கள் பயன்படுத்தி, இந்த மூலிகை முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த முகக்கவசம் புதிய கண்டுபிடிப்பாக காப்புரிமை பெற்றுள்ளது மற்றும் இலங்கை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தால் (ITI) சான்றளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய கண்டுபிடிப்பு ஆணைக்குழு ஏற்பாடு செய்த சஹசக் போட்டியில், இந்த முகக்கவசம் தங்க விருதை வென்றுள்ளது.
அத்துடன் சர்வதேச போட்டியில் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முகக்கவசம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய, அமைச்சர், இந்த புதிய கண்டுபிடிப்பாளர், மேற்கத்திய மருத்துவர் என்பது முக்கியமான விடயம் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த தயாரிப்பை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சர் முன்மொழிந்தார்.