யாழ்.மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரை புத்தாண்டு விழா
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் நேற்று (27.04.2024) நடைப்பெற்றுள்ளது.
புத்தாண்டு நிகழ்வு
மருதங்கேணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.திருவருட்செல்வி தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து சிறுவர்கள் பெண்கள், முதியவர்களுக்கான பல்வேறு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டவர்களினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், மருதங்கேணி
சமுர்த்தி வங்கி உத்தியோகஸ்தர்கள், பிரதேச சமுர்த்தி பயனாளிகள் என பலரும்
கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.