மருத மடு அன்னை பருத்தித்துறை தொம்மை அப்பர் ஆலயத்தில்
மருதமடு அன்னையின் ஊர்வலமானது சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திலிருந்து பருத்தித்துறை முனை தொம்மை அப்பர் தேவாலயத்திற்க்கு வருகைதந்துள்ளது.
பக்தர்களின் மிக பிரமாண்ட வரேற்புடன் மருத மடு அன்னை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திலிருந்து இன்பருட்டி, பருத்தித்துறை துறைமுகம், பருத்தித்துறை நகர் ஊடக தும்பளை வீதிதால் வருகைதந்து நாலாம் குறுக்கு தெரு ஊடாக பருத்தித்துறை முனை புனித தொம்மை அப்பர் ஆலயத்தை நேற்று பிற்பகல் 6:00 மணியளவில் வந்தடைந்துள்ளது.
திருச் சொருப பவனி மேலும், மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி வரும் வீதி எங்கும் பருத்தித்துறை நகரசபையினர் தண்ணீர் தெளித்து வரவேற்றனர்.
அத்துடன் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமர சிங்க தலமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொலிஸார், சிறப்பு அதிரடி படையினர், இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்பு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.