சிறப்பாக இடம்பெற்ற மருதோடை கந்தசாமி கோவில் சங்காபிஷேகம்!
வவுனியா(Vavuniya) - ஓமந்தை பிரதேசத்தில் மருதோடை கிராமத்தில் மக்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் மருதோடை கந்தசுவாமி ஆலயத்தின் சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 09 ஆம் திகதி நடைபெற்றதை தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று நேற்று(24.06.2024) சங்காபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
1008 சங்குகள்
சங்காபிஷேகத்தின்போது 1008 சங்குகள் வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவான பக்த்தர்கள் ஓமந்தை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடப்பவனியாக வந்ததுடன் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அத்துடன், பூசை வழிபாடுகளை தொடர்ந்து பெருமானுக்கு சண்முக அர்ச்சனை நடைபெற்று வீதி உலா வந்ததுடன் சங்காபிஷேகம் இனிதே நிறைவடைந்துள்ளது.