போருக்கு செல்வதற்கு முன் திருமண பந்தத்தில் இணைந்த ரஷ்ய இராணுவ வீரர்கள்
இராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் கலந்து கொண்ட ரஷ்ய இராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்த நிகழ்வொன்று இடம்பிடித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.
43 வீரர்களுக்கு திருமணம்
இந்த நிலையில் போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த 43 வீரர்களுக்கு மாஸ்கோ நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
இராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் கலந்து கொண்ட ரஷ்ய இராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்துள்ளனர். இந்த திருமண நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.