கட்டுப்பாடுகளை மீறி நடக்கும் திருமணங்கள்! - இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை
தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் நாடு முழுவதும் திருமண நிகழ்வுகள் இடம்பெறுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான திருமண நிகழ்வுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வதுடன், பிற கட்டுப்பாடுகளையும் மீறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், அண்மைய காலங்களில் திருமணக் கொத்துகள் பதிவாகியுள்ளதால், திருமண நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில திருமணங்கள், குறிப்பாக கொழும்புக்கு வெளியே, 150 நபர்கள் என்ற வரம்பை மீறி நடத்தப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், விழா மண்டபத்தின் திறனில் 25 வீதம் அல்லது அதிகபட்சம் 125 நபர்களின் பங்கேற்புடன் திருமணங்களை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
