வெளிநாட்டவருடன் திருமணம்- சர்ச்சைக்குரிய சுற்றறிக்கைக்கு எதிராக குரல் எழுப்பும் பதிவாளர்கள்!
வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்களுக்கு 'பாதுகாப்பு அனுமதி அறிக்கை' தேவை என்ற புதிய சுற்றறிக்கையை திருத்தி மூன்று மாத கால அவகாசம் வழங்குமாறு பதிவாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சுற்றறிக்கை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றறிக்கை நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளமையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணங்கள் அனைத்திலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் பல தம்பதிகள் வெளிநாட்டில் திருமணத்தை பதிவு செய்ய பரிசீலித்து வருகின்றனர்.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள திருமணப் பதிவாளர் வரதலட்சுமி சோமசூரியசிங்கம் டிசம்பர் 24 அன்றே புதிய சுற்றறிக்கையைப் பெற்றுள்ளார்.
எனினும் அவர் ஏற்கனவே இலங்கை புலம்பெயர் சமூகங்களைச் சேர்ந்த பங்காளிகளுடன் குறைந்தது ஆறு ஜோடிகளுக்கு திருமண அறிவிப்பை உறுதிப்படுத்தியு்ள்ளார்
இதனையடுத்து அந்த குடும்பங்களில் பெரும்பாலானவர்கள் ஜனவரி ஆரம்பத்தில் பதிவு நிகழ்வை திட்டமிட்டு இலங்கைக்கு வந்துள்ளனர்.
எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை அவசரமாக சந்திக்க, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடாக இந்த வாரம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக வரதலட்சுமி சோமசூரியசிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும், வெளிநாட்டவர்கள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கையை’ பெற, தனது நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஆறு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த சான்றிதழின் அடிப்படையில், பதிவாளர் நாயகம், திருமணத்தை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவார் என்று இலங்கை அரசாங்கத்தின் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் புதிய நடைமுறைகள் வெளிவந்தவுடன், சுற்றறிக்கை முற்றிலும் பாரபட்சமானது மற்றும் விருப்பமானவரை சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளும் உலகளாவிய மனித உரிமைக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் (HRCSL) ஒரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
