அமெரிக்க கடற்படை போர்ப்பயிற்சியில் பங்கேற்க கடற்படையினர் பயணம்
அமெரிக்காவின் கடற்படையினர் மேற்கொள்ளவுள்ள விசேட போர்ப்பயிற்சியில் கலந்து கொள்ள இலங்கைக் கடற்படையினர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கடற்படையினர் Rim Of The Pacific-2022 (RIMPAC-2022) எனும் கடற்போர் ஒத்திகையொன்றை நடத்தவுள்ளனர்.
போர் நடவடிக்கைக்கான விசேட பயிற்சி
இதன் போது வான், தரை, கடல் மூன்றிலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி இலக்குகளை அழிக்கும் போர் நடவடிக்கைக்கான விசேட பயிற்சியும் அதன் பின் ஒத்திகையும் நடத்தப்படவுள்ளது.
இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் அதிகமான கடற்படை வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் பயிற்சிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பசுபிக் கடற்பிராந்தியத்தில் நடைபெறவுள்ளது
இதில் கலந்து கொள்வதற்காக இலங்கைக் கடற்படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவொன்று புறப்பட்டுப் போயுள்ளதாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

நீச்சல் குளத்தில் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட பாவனி! வாயடைத்துப்போன ரசிகர்கள் Manithan

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
