வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் எங்கே!
வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் எங்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சித் தலைமைகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி சுருக்கமாக கூறினால் மிளகாய், நெத்தலி என்பனவற்றை சாப்பிட்டு கொத்தமல்லி குடிக்குமாறு அரசாங்கம் கூறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் குறைவில்லை, எரிபொருள் விலைகள் குறையவில்லை, மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணம் என்பன குறையவில்லை மருந்துப் பொருட்களின் விலைகள் குறையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் எந்த விலையையும் குறைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வட்டி முதலாளிமார் மக்களிடம் பணம் வசூலித்து எதனையும் அனுபவிக்காமல் இறந்து போவது போன்றதொரு வரவு செலவுத் திட்டமே அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மொத்த வருமானத்தில் 86 வீதத்தினை வரி மூலம் அறவீடு செய்ய முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆட்சிக் காலத்தில் இந்த அரசாங்கம் பெரிய வேலைத் திட்டங்கள் எதனையும் செய்யவில்லை என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.