ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக மரிக்கார் நியமனம் (Photos)
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளராகக் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி நியமனம்
பதவிக்கான நியமனக் கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (16) கையளித்துள்ளார்.

எஸ்.எம். மரிக்கார், ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் நாமல் ராஜபச்சவின் நேரடி தொடர்பாட்டாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட எஸ்.நிரோஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்படுவதற்கு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் ஆரம்ப நிகழ்வும் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் நேற்று(16.12.2.2022) முன்னாள் அமைப்பாளர் கருணதாசாவின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் வவுனியாவில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்தி-ஷான்