யாழ்ப்பாணத்தில் மார்கழிப் பெருவிழா யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம்
தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்டை தொடர்ந்து யாழ்ப்பாணம்(Jaffna) பண்பாட்டு மையம் வரை யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மார்கழிப் பெருவிழா
இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பழனி ஆதீன குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, தென்னாடு முதல்வர் குணரத்தினம் பார்த்தீபன், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் அம்பலவாணர் அருள் வழிபாடு நடைபெற்று கலைநிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri