விவசாயிகளின் மாபெரும் போராட்டம்! ஒன்றிணையுமாறு நாடாளுமன்றில் அழைப்பு (வீடியோ)
நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம் ஆகியோருக்கு இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கேள்வி பதில்களின்போதே இந்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது, ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்க காலத்தின்போது கபீர் ஹாசிமுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து கபீர் ஹாசிம், தம்மிடம் வந்து அழுததாக மஹிந்தாநந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.
இதற்கு மத்தியில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, அரசாங்கம் விவசாயத்துறையில் தோல்வியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்ப கட்டமாக விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுத்தார்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
