இலங்கைக்கான புதிய ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக, கனடாவைச் சேர்ந்த Marc-Andre Franche என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஃபிராஞ்ச், 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றியுள்ளார்.
சேவைகள்
இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிறந்த நிர்வாகம், உள்ளூர் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக லிபியாவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட வதிவிடப் பிரதிநிதியாகச் செயற்பட்டார்.
உலகளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைதியை நிலைநிறுத்த அவர் முயற்சிகளை மேற்கொண்டார்.
அவர் லண்டன் ஸ்கூல் ஒஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் மற்றும் ஐரோப்பிய விவகாரங்களில் லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் வளர்ச்சியில் முதுகலைப்பட்டங்களையும், யுனிவர்சிட்டி டி மாண்ட்ரீலில் அரசியல் அறிவியலில் பிஎஸ்சி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
