போதைப்பொருள் சோதனையில் 90,000 பேர் கைது
இந்த வருடத்தில் இதுவரை போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் தொண்ணூறு ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி திரு.நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
1,441 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 45,801 சந்தேகநபர்கள் அங்கு கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் 11,881 கிலோகிராம் கஞ்சா மற்றும் 34,062 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 109 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10,532 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை
அத்துடன், மேல் மாகாண பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 02 கிலோகிராம் 148 கிராம் மாவா, 09 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 01 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 10 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை இலக்கு வைத்து சோதனைகள் தொடரும் என பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
