ஜனாதிபதியின் உத்தரவால் அச்சத்தில் பல அதிகாரிகள்
வேலை செய்யாத அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலருக்கு பதவி இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சுக்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அக்கறை செலுத்தாமல், ஆதரவு வழங்காமல் இருக்கும் அமைச்சின் செயலாளர்கள், பதில் செயலாளர்கள், நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் இயக்குனர்களை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அமைச்சர்களுக்கும் அறிவித்துள்ளார்.
பிரதானிகள் பலர் பயணக்கட்டுப்பாட்டினை பயன்படுத்தி வீட்டில் இருப்பதோடு எவ்வித கடமைகைளை செய்வதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அரசாங்கத்தின் அனைத்து கொடுப்பனவுகளையும் குறைவின்றி பெற்றுக் கொள்வதாக அமைச்சர்கள் பலர் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நியமனங்கள் தன்னால் மேற்கொள்ளப்பட்டவைகள் என்றாலும், நாடு மற்றும் அமைச்சர்களின்ன வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் செயற்படாத அனைத்து அதிகாரிகளினதும் தகவல்கள் தங்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து அதிகாரிகளும் எவ்வளவு நெருக்கமானவர்கள் என்றாலும் அதற்கான வேறு தகுதியான நபர்களை நியமிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரச தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri