முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொற்று உறுதி
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கோவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுச் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள்.
மாவட்டத்தில் கிராமங்களில் பல மக்கள் தொற்றுக்கு இலக்காகி உள்ள நிலையில், நாளாந்தம் மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைக்கோ அல்லது பி.சி.ஆர் பரிசோதனைக்கோ உட்படுத்தாத நிலையில் வீடுகளில் வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 அகவையுடைய வயோதிபர் ஒருவர் கோவிட் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
முள்ளியவளை தெற்கினை சேர்ந்த வயோதிபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் 3 பேரும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 3 பேரும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 4 பேரும், வெலிஓயா பிரதேசத்தில் 10 பேரும், மாங்குளம் பிரதேசத்தில் ஒருவரும் மல்லாவி பிரதேசத்தில் 4 பேரும் என மாவட்டத்தில் 25 பேர் நேற்று (28) தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
