இலங்கையில் மேலும் பலர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதன்படி, இறுதியாக 40 கோவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. அந்த வகையில் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1696ஆக அதிகரித்துள்ளது.
மே 21ம் திகதி முதல் இன்று வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மட்டும் ஐந்து கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 21ம் திகதி ஒருவரும், 25ம் திகதி ஒருவரும், 27ம் திகதி இருவரும், 28ம் திகதி இருவரும், 30ம் திகதி எட்டு பேரும், 31ம் திகதி நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஜூன் 01ம் திகதி 07 மரணங்களும், ஜூன் 02ம் திகதி 04 மரணங்களும், ஜூன் 03ம் திகதி 07 மரணங்களும், ஜூன் 04ம் தினதி மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 17 பெண்களும், 23 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 3,094 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டள்ளது. இதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 202,348ஆக உயர்வடைந்துள்ளது.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam