சுவிஸில் 40 உயிர்கள் பறிபோன கோர சம்பவம்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
சுவிட்ஸர்லாந்தில், புத்தாண்டு விழாவின் போது உல்லாச விடுதி ஒன்றில் ஏற்பட்ட சம்பவமானது ஒரு மிகப் பெரிய தீ விபத்து என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம், ஒரு பாரிய வெடிப்பு எனவும் தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நாட்டின் அதிகாரப் பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இந்த கோர விபத்தானது, Conflagration என விபரிக்கப்படும் ஒரு பாரிய தீயினால் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பத்தில் அதிகாரிகள்
மேலும், Conflagration என்பது, அதிக சேதத்தை விளைவிக்கும் பெரும் தீவிபத்து என வெலெய்ஸ் கென்டன் சபாநாயகர் பீட்ரைஸ் பில்லவுட் குறிப்பிட்டுள்ளார்.

தீப்பொறிகள் பொருத்தப்பட்ட ஷாம்பெயின் போத்தல்களால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் சரியான காரணத்தை வெளியிட நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ள அதேவேளை, சம்பவம் குறித்து மேலும் பல தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய, விபத்து ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை அறிய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உல்லாச விடுதியின் மனித கொள்ளளவு தொடர்பில் இதுவரை அறிய முடியவில்லை எனவும், தற்போதைய நிலவரப்படி 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 115 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri