கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் பலர்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் கோவிட் தொற்றாளர்கள் பலருக்கு தொடர்ந்து ஒக்ஸிஜன் வழங்க நேரிட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும் கோவிட்டு தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் என தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ சத்திசந்திர தெரிவித்து்ளளார்.
தேசிய வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்கள் 325 பேர் இதுவரையில் விகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 75க்கும் அதிகமானோர் ஒக்ஸிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலைமை மிகவும் ஆபத்தானதாகும். துரதிஷ்டவசமாக அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டில்லை. அவர்களுக்கு ஒக்ஸிஜனை அகற்றுவதற்காக வாய்ப்புகள் இல்லை. சிலர் ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய ஆபத்து! - சம்பந்தன் வெளிப்படுத்திய தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |