மன்னார் மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலை : பல குடும்பங்கள் பாதிப்பு (Photos)
மன்னார் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் விவசாய நிலங்களில் அதிகளவு நீர் தேங்கியுள்ளதால் அதிகளவான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் விவசாய செய்கையும் அழிவடைந்துள்ளன.
மன்னார் மாவட்ட விவசாய செய்கை அழிவு தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தரவுகளை சேகரித்து வருவதுடன், வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்புள்ளதாக கருதப்படும் சேல்வேரி, தட்சனாமருதமடு போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மழை தொடரும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |



மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
