அம்பாறையில் சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள்
அம்பாறை (Ampara) மாவட்டத்தில் அடைமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வான்கதவுகள் திறப்பு
அம்பாறை - சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி கிராம சேவகர் பிரிவில் உள்ள 19 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் தற்காலிகமாக நேற்று (20) சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய இடை தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பார்வையிட சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம், வீரமுனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கெப்டன் தனுக, தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் அஸாறுடீன் சலீம், கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், தொடர் அடைமழை காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் வெள்ளம் வடிந்தோடுவதற்காக வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.





டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan