பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்தது பிரித்தானிய அரசு! பல நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்ப்பு
பங்களாதேஷ், பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குத் பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளது. கோவிட் - 19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி 04:00 மணி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், மற்றும் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது.
இதன்படி, தடை செய்யப்படும் நாடுகளிலிருந்து வரும் பிரித்தானிய குடிமக்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அவர்கள் விடுதியில் தங்கியிருக்கும் போது, இரண்டு கோவிட் - 19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், எதிர்மறையான சோதனை முடிவு அவர்கள் தனிமைப்படுத்தலில் தங்கள் நேரத்தை குறைக்க முடியும் என்று அர்த்தமல்ல.
மேலும் சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஐந்தாம் நாளில் எதிர்மறையான சோதனைக்குப் பிறகு வீடுகளில் தனிமைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 நாடுகள் பிரித்தானிய அரசாங்கத்தினால் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு: ஓமான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஆப்பிரிக்கா: அங்கோலா, போட்ஸ்வானா, புருண்டி, கேப் வெர்டே, காங்கோ ஜனநாயக குடியரசு, ஈஸ்வதினி, எத்தோபியா, கென்யா, லெசோதோ, மலாவி, மொசாம்பிக், நமீபியா, ருவாண்டா, சீஷெல்ஸ், சோமாலியா, தென்னாபிரிக்கா, தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே
ஆசியா: பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ்
தென் அமெரிக்கா: அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்சு கயானா, கயானா, பனாமா, பராகுவே, பெரு, சுரினாம், உருகுவே, வெனிசுலா.