வலி. மேற்கு பிரதேச சபையின் இரு அமர்வுகளுக்கு சமூகமளிக்காத தவிசாளர்
வலி. மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு உப தவிசாளர் சச்சிதானந்தன் (Sachidanandan) தலைமையில் நேற்று பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், “ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான தவிசாளர் விஜிமருதன் (Vijimaruthan) இரண்டு சபை அமர்வுகளுக்கு சமூகமளிக்கவில்லை. அவருக்கு தொடர்பு ஏற்படுத்தினாலும் தொலைப்பேசி செயலிழந்துள்ளது. அவருடைய தற்போதைய நிலை என்ன?” என்று சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் இதற்கு பதிலளிக்காத உப தவிசாளர் சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துள்ளார்.
என்ற பொதும் தவிசாளர் சபை அலுவலக நடவடிக்கைகளுக்கு கடந்த தினங்களில் சமூகமளித்து இருந்ததாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதை தொடர்ந்து அறிக்கை தொடர்பான விவாதத்தில் உறுப்பினர்கள், தாம் கதைக்கும் விடயங்கள் குறித்த அறிக்கையில் இடம்பெறவில்லை, இதற்கான காரணம் என்ன? முக்கியமான விடயங்கள் தான் இடம்பெற வேண்டுமாயின் அதற்கான ஒரு தீர்மானங்களை எடுங்கள் என சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உப தவிசாளர் ஏற்கனவே இது தொடர்பில் தீர்மானம் இருப்பதாகவும் சாராம்ச விடயங்களே அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கை தொடர்பான விவாதத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெண் உறுப்பினர், செயலாளர் ஒரு முறை எனது வீட்டிற்கே வந்து கையெழுத்து வேண்டியதாக சபையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு கண்டனத்தை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர், செயலாளர் பெண் உறுப்பினரின் வீட்டிற்கு செல்வது கண்டிக்கத்தக்க செயல் எனவும், அவ்வாறு செல்லக் கூடாது எனவும், அதற்கான தேவை எழக் கூடாது எனவும் சபையில் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுழிபுரம் வட்டார உறுப்பினர் இருதயகுமாரன் (Irudhayakumaaran) “நான் நல்ல காலம் பெண்ணாக பிறக்கவில்லை” என கூறியுள்ளார்.
இதற்கு அவரின் அருகில் இருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர், நாங்களும் பெண்கள் தான் நீங்கள் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. உடனடியாக குறித்த பகிரங்க சபையில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
எனினும் சம்பந்தப்பட்ட உறுப்பினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில் மற்றுமொரு உறுப்பினர், உங்களை பெற்றதும் தாய் தான். பெண்களை இழிவாக பேசக்கூடாது. நீங்கள் இந்த பகிரங்க சபையில் மன்னிப்புக் கேட்கத் தான் வேண்டும் என்று கூற ஏனைய உறுப்பினர்களும் இதனை ஆமோதித்துள்ளனர்.
இதனை அடுத்து உப தவிசாளர் இது கண்டனத்திற்குரிய வார்த்தை. இந்த வார்த்தைக்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதற்கு இணங்க சபையில் சம்பந்தப்பட்ட உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri