தனிமைப்படுத்தலில் இருந்த பல பிரதேசங்கள் இன்று விடுவிப்பு
இன்று அதிகாலை 5 மணியில் இருந்து பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பொரளை பொலிஸ் பிரிவின், கொத்தம்புர மாடி வீட்டுத் தொகுதி, கோதம்புர 24 தோட்டம், கோதம்புர 78 தோட்டம் மற்றும் தெமட்டகொட பகுதியின் வேலுவல வீதி ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது.
மேலும் குமாரிமுல்ல கிராம சேவர் பிரிவு, மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் கல்ஓழுவ பிரதேசத்தின், ஜும்மா மஸ்ஜிட் மாவத்தை, ஹித்ரா மாவத்தை, அழுத்வீதி, அக்கரகொட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
