யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தின், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவின் குருநகர் மேற்கு மற்றும் ரெக்லமேசன் மேற்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில், காத்தான்குடி பொலிஸ் பிரிவின் மஞ்சதொடுவாய் வடக்கு மற்றும் மஞ்சதொடுவாய் தெற்கு ஜின்னா வீதி கிராம சேவகர் பிரிவும், மண்முனை பொலிஸ் பிரிவின் மாமாங்கம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில், இழுப்பு கெதர கிராம சேவகர் பிரிவின் வில்கொட கிராமும், கனுக்கெட்டிய கிராம சேவகர் பிரிவின் கனுக்கெட்டிய கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
