நாடாளுமன்றை இழிவுபடுத்த அனுமதிக்க முடியாது - மனுஷ நாணயக்கார
சில்லறைத்தனமான அரசியல் நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றின் காலத்தை விரயமாக்க இடமளிக்க வேண்டாம் என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றம் கூடிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்ச்சி நிரலுக்கு புறம்பான வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்நிலையில்,இது தொடர்பில் நாடாளுமன்றில் மனுஷ நாணயக்கார கருத்து வெளியிட்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், அதன் பின்னர் இவ்வாறான விடயங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் ஒழுக்கம் பற்றி பேசுபவர்கள் நிகழ்ச்சி நிரலை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம்சுமத்திய அவர், நாடாளுமன்றை மீண்டும் மீண்டும் இழிவுபடுத்தும் வகையில் சிலர் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |