கோட்டாபய விரைவில் மன்னிப்பு கோருவார்! மனுஷவின் எதிர்வு கூறல்
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கோட்டாபயவை பதவி விலகிச் செல்லுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நீதிமன்றத்தின் ஊடாக போராட்டங்களை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
தாம் எடுத்த தீர்மானங்களுக்காக கோட்டாபய இன்று மன்னிப்பு கோரினாலும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நட்டங்களுக்கு யார் பொறுப்பேற்பர் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை விரட்டும் வரை இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றும் மனுஷ குறிப்பிட்டார்
நீண்ட காலத்துக்கு பின்னர் தமது குற்றங்களை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோரும் கோட்டாபய ராஜபக்ச, நாளை வந்து தாம் பதவி விலகக் கோருவதற்கு தாமதாமாகிவிட்டது என்று கூறக்கூடும் என்றும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
