வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் பொலிஸாரால் கைது
வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய தேவைகளுக்காக கொழும்பிற்கு சென்று இன்று வீடு திரும்பிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மனுவல் உதயச்சந்திரா
“மனுவல் உதயச்சந்திரா வைத்திய தேவைகளுக்காக நேற்று கொழும்பிற்கு வருகைதந்த நிலையில் அவரை கைதுசெய்ய பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் ''மனுவல் உதயச்சந்திராவை கைதுசெய்யவே வந்துள்ளோம். அவர் வருகை தந்தவுடன் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவாருங்கள்" என உறவினர்களிடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் இன்று அதிகாலை வைத்திய தேவைகள் முடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில், பொலிஸ் நிலையத்தில் மனுவல் உதயச்சந்திரா முன்னிலையாகியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
இந்நிலையில் நடவடிக்கை தொடர்பில் முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படாத நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan