மாந்தை கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்
முல்லைத்தீவின் மாந்தை கிழக்கு பிரதேச பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (17/12/2025) மதியம் நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான திலகநாதனின் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில் பிரதேச செயலாளரினால் பேரிடர் கால அவசர தேவைகள் தொடர்பாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தினருடனும் அதனை விட அபிவிருத்தி செய்ய வேண்டிய புனரமைக்கப்பட வேண்டிய குளங்கள் கால்வாய்கள் வீதிகள் தொடர்பாக பேசப்பட்டது.
நடவடிக்கை
இதன்போது, மாந்தை கிழக்கில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை தொடர்பாக பேசப்பட்டதுடன் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என அமைப்பு சார்ந்தவர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்களும் தெரிவித்தனர்.

கால் நடைகள் வளர்ப்பாளர்கள் வீதிகளிலும் விவசாய காணிகளிலும் கால்நடைகளை விடுவது தொடர்பாக பேசப்பட்டதுடன் பிரதேச சபையால் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
மேலும், இந்த விடயத்திற்கு பொலிஸாரின் உதவி கோரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.