உத்தரவாதங்களை வழங்கிய பின்னரே தமிழ் மக்களின் வாக்குகளை அநுர தரப்பு கோரவேண்டும்: மனோ சுட்டிக்காட்டு
வடக்கு - கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் வாக்குகளை பெற சில உத்தரவாதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு வழங்கவேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் மனோ கணேசன் இன்று(19.10.2024) விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய “காணி உரிமை” உத்தரவாதங்களையும், வடகிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இருக்கின்ற மேலதிக இராணுவ முகாம்களை மூடல், இவை மூலம் தனியார் காணிகள் விடுவிப்பு ஆகியன அடங்கிய “காணி உரிமை” உத்தரவாதங்களையும் வழங்கி விட்டு அனுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை மலையகத்திலும், வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் வாக்குகளை கோரலாம்.
தனியார் காணிகள்
நாம் பங்காளிகளாக இருந்த நல்லாட்சியின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய எமது கட்சிகளின் வலியுறுத்தல் காரணமான இராணுவம் வசம் இருந்த கணிசமான காணிகள் வடக்கில் விடுவிக்கபட்டன.
பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் இந்த காணி விடுவிப்பு நின்று போனது. மேலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு வருட ஆட்சி காலத்தில் இதுபற்றி பேசபட்டது.
ஆனால், காரியம் எதுவும் நடக்கவில்லை. இன்று, போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இன்னமும் நிலை பெற்று இருக்கும் மேலதிக இராணுவ முகாம்களை மூடி, விடுவிக்க படாமல் எஞ்சி இருக்கின்ற தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அநுர அரசின் கொள்கைதான் என்ன என்பது தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
காணி உரிமை
மலையக தமிழர்களை காணி உரிமையை பிரதான அம்சமாக கொண்ட விரிவான ஒரு சாசனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் சஜித் பிரேமதாசவுடன் செய்திருந்தோம்.
தூரதிஷ்டவசமாக அவர் வெற்றி பெறவில்லை. ஜனாதிபதி ரணிலின் இரண்டு வருட ஆட்சி காலத்தில் மலையக மக்களுக்கு காணி வழங்கல் பற்றி மீண்டும், மீண்டும் பேச பட்டது.
நிதி ஒதுக்கீடு செய்ய பட்டதாகவும் கூற பட்டது. ஆனால், காரியம் நடக்கவில்லை. காணி உரிமையை சட்டப்படி வழங்க வாய்ப்பு இருந்தும் தனது இரண்டு வருட ஜனாதிபதி ஆட்சி காலத்தில் அதை செய்ய ரணில் தவறி விட்டார்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
