ஒட்டுமொத்த அரசையுமே கொளுத்தி வீட்டிற்கு விரட்டியடிக்க வேண்டுமென ஆவேசம்
விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசையுமே கொளுத்தி வீட்டிற்கு விரட்டியடிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், வரவு - செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் பொகவந்தலாவையில் நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொய்யுரைத்து அதன்மூலம் ஆட்சியை முன்னெடுப்பதற்கே இந்த அரசு முயற்சிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri