புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக மனோ அணியினரும் போர்க்கொடி
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது ஜனாதிபதிக்குக் கடுமையான - கொடுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதனை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும், புதிய சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் பயங்கரமானவை.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

எனவே தான் அதனைப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனச் சொல்வதை விட, அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கின்றது.
இந்த புதிய சட்டமூலம் ஜனாதிபதிக்குக் கடுமையான - கொடுமையான அதிகாரத்தைக் கொடுக்கின்றது. இது தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளைத் தடை செய்யலாம்.
அது உறுப்பினர்களுக்குப் பாதகமாக அமையும். மக்களுக்குப் பிரசாரம் செய்யவும், ஒன்றுகூட முடியாத சூழ்நிலையும் உருவாகும் என கூறியுள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam