தோட்ட தொழிலாளர்களை வைத்து அநுர அரசியல் செய்கிறாரா..! மனோ கணேசன் கேள்வி

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Mano Ganeshan Sri Lankan Peoples NPP Government
By DHUSHI Feb 19, 2026 12:03 PM GMT
Report

காணி உரிமை, வீட்டுரிமை, அரசியல் உரிமை, கல்வி உரிமை, ஆகிய உரிமை அபிலாஷைகளை கோரிக்கைகளை கொண்ட ஒரு தேசிய இனமாக மலையக மக்கள் வளர்ந்து விட்டார்கள். ஆனால், எமது அபிலாசைகளை அநுர அரசு கூலி தொழில் பிரச்சினையாக மட்டுமே சுருக்கி காட்டுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று( 19.02.2026) கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும், சுவிட்சர்லாந்து தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுர அரசின் ராஜதந்திரம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பின்னணியில், சுவிஸ் அரசு, இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பிலும், தனது அக்கறையை விரிவுப்படுத்த வேண்டும்.

தோட்ட தொழிலாளர்களை வைத்து அநுர அரசியல் செய்கிறாரா..! மனோ கணேசன் கேள்வி | Mano Ganesan Important Meeting

மலையக மக்களின் பரந்து பட்ட பிரச்சினைகளை தேசிய, சர்வதேசிய, தளங்களுக்கு கொண்டு வரும், அரசியல் சிவில் உரையாடல் தளம் ஒன்றை ஏற்படுத்த சுவிஸ் உதவிட வேண்டும்.

சுவிஸ் நல்லெண்ணம் எமது மக்களையும் வந்தடையும் வேளை வந்துவிட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நேரடி சந்திப்புக்கான பதில் கிடைக்கவில்லை.

மலையகத் தமிழர் சமூகத்தின் சார்பில் அரசாங்கத்திடம், சுவிஸ் அரசு உறுதியாக எடுத்து கூற வேண்டும்.

தூதுவரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

பேரழிவு தேசிய அளவில் இருந்த போதிலும், உயிரிழப்புகளிலும் இடம் பெயர்விலும் தோட்ட தொழிலாளர் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது. தோட்ட காணிகளை கையகப்படுத்தி பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க அவசர மற்றும் நில சட்டங்களின் கீழ் இலங்கைக்கு போதிய சட்ட அதிகாரம் உள்ளது.

தோட்ட தொழிலாளர்களை வைத்து அநுர அரசியல் செய்கிறாரா..! மனோ கணேசன் கேள்வி | Mano Ganesan Important Meeting

ஆனால் அரசுக்கு அதற்கான மனம் இல்லை. அத்துடன், மலையகத் தமிழர்கள் இனி தொழிலாளர் சமூகமாக மட்டும் அல்லாது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமை எதிர்பார்ப்புகளைக் கொண்ட இலங்கையின் ஒரு இன தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பில், கூறியபடி மலையக மக்களின் காணி உள்ளிட்ட உரிமைகளை ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரி சலுகைக்கான நிபந்தனைகளில் ஒன்றாக வேண்டும். இதற்கு சுவிஸ் உதவிட வேண்டும். இதையே நாம் பிரான்ஸிய தூதுவரையும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில், ஜமமு இணை உபதலைவர் பாரத் அருள்சாமி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இமிதியாசான் நவாஸ் மற்றும் சுவிஸ் அரசியல் செயலாளர் ஜஸ்டின் பொய்லாட், அரசியல் அதிகாரி கணிஷ்கா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  

பொது மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து சற்றுமுன் வந்த அறிவிப்பு

பொது மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடமிருந்து சற்றுமுன் வந்த அறிவிப்பு

AI எதிர்காலத்தை எந்த நாடும் தனித்து கட்டியெழுப்ப முடியாது..! டெல்லியில் அநுர

AI எதிர்காலத்தை எந்த நாடும் தனித்து கட்டியெழுப்ப முடியாது..! டெல்லியில் அநுர

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US