ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கான ஆதரவு தொடர்பில் கலந்துரையாடல்
புதிய ஜனாதிபதிக்கான தெரிவு தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்ப்பித்துள்ள அனைத்து வேட்பாளர்களிலும் தமது கட்சியினர் யாருக்கு அதரவு அளிப்பார்கள் என்பது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை குழு நாளை(19) ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடும்.
நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம்(20) புதிய ஜனாதிபதிக்கான தெரிவு தேர்தல் நடைபெறவுள்ளது.

வேட்பாளர்கள் தொடர்பில் கலந்துரையாடல்
அதன்படி, புதிய ஜனாதிபதிக்கான தெரிவு தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள வேட்பாளர்களில் தமது கட்சியின் ஆதரவு யாருக்கு வழங்கப்படும் என்பது தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகரும் வாக்களிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam