இளம் கிரிக்கட் வீரரை வாழ்த்திய மனோ கணேசன்
இலங்கை அணியின் இளம் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரமவிற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அறிமுக போட்டியிலேயே 11 விக்கட்டுகளை வீழ்த்தி பிரவீன் ஜயவிக்ரம சாதனை படைத்துள்ளார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பிரவீன் அறிமுகமாகியிருந்தார்.
நமது அறிமுக பந்துவீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம 11 விக்கட்டுகளை கைப்பற்றி மகத்தான சாதனை படைத்துள்ளார் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இளையோருக்கு வானமே எல்லை எனவும் மனோ கணேசன் வாழ்த்து மனோ கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டித் தொடரில் இலங்கை அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.