அனுபவம் இல்லாவிட்டால் தேர்தலில் ஏன் களமிறங்கினார் ஜனாதிபதி? மனோ கேள்வி
கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) எதற்காக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் அனைவரும் தலைவன் என ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, தன்னை விடவும் தனது தமையனுக்கே அதிக அனுபவம் இருப்பதாக கூறுகிறார்.
அவ்வாறெனில் அவர் எதற்காக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார்? தேர்தல் பிரச்சாரங்களின் போது “நான் மட்டுமே அனைத்தையும் செய்தேன், என்னால் மாத்திரமே செய்ய முடியும்” என்று பேசினார்.
ஆனால் இப்போது அவரால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது.
எனவே ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியதை போன்று அவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியவில்லை என்றால் நிர்வகிக்கும் திறமையுள்ளவர்களிடம் நாட்டைக் கையளித்து விலகிச் செல்லுமாறு வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
