பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் பாய வேண்டும்: மனோ கணேசன் காட்டம் (Video)
எந்தவொரு மத தலைவரும் தமது சர்ச்சைக்குரிய இனவாத, மதவாத நடவடிக்கைள் தொடர்பில் இனிமேல் சட்டத்திலிருந்து விலக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பதிவிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுக்களை தொடர்ந்து இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களுக்கு எதிராக பேசி வரும் பெளத்த பிக்குகளை நோக்கியும் இதே சட்டம், ஒழுங்கு மற்றும் நீதிதுறை பாய வேண்டும்.
நீதிமன்ற நடவடிக்கைகள்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் பேச்சாளர் நதாஷா எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக அரசாங்கத்தின் சட்டம், ஒழுங்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படுகின்றன.
சட்டம், ஒழுங்கு, நீதி துறை தன் கடமையை செய்யட்டும்.
If Pastor #JeromeF & now Speaker #NathashaE are breaking the law with their speech then the same law should be applied to monks who have spouted hate speech against fellow religions. The law can't be ONE-SIDED anymore! @RW_UNP @sajithpremadasa @anuradisanayake pic.twitter.com/Ect6trYA7j
— Mano Ganesan (@ManoGanesan) May 29, 2023
சட்டம் சமமானது
இந்நாட்டில் இனவாத வெறுப்பு பேச்சுகளை தொடர்ந்து பேசி வரும் பெளத்த பிக்குமார்களுக்கு எதிராகவும் பயன்பட வேண்டும். இனிமேல் இந்நாட்டில், சட்டம் ஒருபக்க சார்பாக இருக்க முடியாது.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் ட்விட்டர் தளங்களுக்கும், தமது டுவிட்டர் செய்தியை இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
