மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரையை சுத்தப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு
மன்னார் - சாந்திபுரம் பெளத்த விகாரை சிரமதான பணி இன்று காலை அப்பகுதி இளைஞர்களால் முன்னெடுக்கபட்டுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் 'சமூக ஒத்திசைவை பலப்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில் இந்த சிரமதானப்பணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பௌத்த மக்களால் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ரெஜினா ராமலிங்கம் தலைமையில் லியோ மற்றும் இளைஞர் கழகங்கள், தன்னார்வ இளைஞர்கள் இணைந்து குறித்த சிரமதான பணியை முன்னெடுத்திருந்தனர்.
சிரமதான பணியில் சர்வமத இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்து கொண்டு மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை செயற்பாட்டு ரீதியாக வெளிப்படுத்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 14 மணி நேரம் முன்

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

பிரித்தானிய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரிஷி யார்? மகாராணியை விட அதிக சொத்து கொண்ட அவர் மனைவி News Lankasri

நடிகர் அஜித்தின் இந்த இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. பலரும் பார்த்திராத ஒன்று Cineulagam
