மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை: காதர் மஸ்தான்
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றே உயர் மட்டங்களில் இருந்து தெரிவிக்கப்படுவதாக மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
காற்றாலை திட்டத்தின் விரிவுபடுத்தலுக்கு எதிராக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தானிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தொடர்ச்சியாக நான் மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடக்கின்ற அதி உயர் கூட்டங்களில் இந்த காற்றாலை பிரச்சினை தொடர்பாக தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
காற்றாலை திட்டத்தினால் எவ்வித பாதிப்பும் இல்லை
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது இந்த காற்றாலை அமைக்கப்படுவதால் இப்பொழுதும் எதிர்காலத்திலும் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
ஆனால் மக்கள் தொடர்ச்சியாக அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு
வரும் வாரத்தில் கூட பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நான் அறிகிறேன். அதை எல்லாம் நாங்கள் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.
அதே நேரம் மக்களுடைய நிலைப்பாட்டையும் உயர் மட்டத்துக்கு வெளிப்படுத்துகிறோம். அதோடு காற்றாலை விடயத்தில் நாங்கள் மக்களுடன் இருப்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)
உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி News Lankasri
![பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ](https://cdn.ibcstack.com/article/e2e1cc8b-1a0a-4a48-9f21-b58e2287b57c/25-67a5ed0769138-sm.webp)
பிக்பாஸ் புகழ் ஷிவானியா இது, முகத்தை என்ன செய்தார், ஆளே மாறிவிட்டாரே?.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)