கைவிடப்படும் நிலையில் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையப் பணிகள்
மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையப் பணிகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான போதிய நிதிவளம் இன்மை காரணமாகவே மின்சார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
நிதிவளம் இன்மை
தற்போதைய நிலையில் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான காணிகள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் அப்பிரதேசத்தில் காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக வலசை வரும் பறவையினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் சாத்திய வள அறிக்கை தயாரிக்கப்படும் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மின்சார சபையின் தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri

இயக்குனர் அட்லீயின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா?- பிரபலத்துடன் அவர்கள் எடுத்த ஸ்பெஷல் போட்டோ Cineulagam
