மன்னார் முள்ளிக்குளம் காற்றாலை மின்சார மைய திட்டம் காலதாமதமாகுமென அறிவிப்பு
மன்னாரில் உள்ள முள்ளிக்குளத்தில் இலங்கை மின்சார சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச 34-டேர்பைன் காற்றாலை மின்சார நிலையப் பணிகள் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், அந்தப் பகுதியின் வளமான பறவை இனங்கள் மற்றும் புலம்பெயர் பறவையினங்கள் மீது, குறித்த மின்சார நிலையத் திட்டம், தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை ஆராயுமாறு கோரப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த திட்டப்பணிகள் தாமதமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
83 பறவையினங்கள் இனங்கள் பாதிக்கப்படும்

காற்றாலைகளிலிருந்து எழும் இயங்கங்களால்,பறவைகள் மற்றும் வெளவால்கள் போன்றவற்றுக்கு மரணம் மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்ததிட்டம் காரணமாக 83 பறவையினங்கள் இனங்கள் பாதிக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த திட்டம் தொடர்பான கள ஆய்வுகள் ஒரு குறுகிய காலத்திற்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. எனவே இதனை மையப்படுத்தி குறைந்தபட்சம் ஒரு வருட ஆய்வு நடத்தப்படவேண்டும் என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புலம் பெயர்ந்த பறவைகள்

புலம் பெயர்ந்த பறவைகள் பல நுழைவுப் பாதைகள் வழியாக இலங்கையை அடைகின்றன. மன்னார் பிராந்தியத்தில் ஒரு முக்கிய நுழைவுப் புள்ளி உள்ளது.
அதேபோல், பருவத்தின் முடிவில் நாட்டை விட்டு வெளியேறும் போதும் அந்த பறவைகள்,
மன்னார் பகுதியை தங்கள் கடைசி நிலைப் புள்ளியாகப் பயன்படுத்துகின்றன என்று
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam