அதிசய பூமியாக மாறும் மன்னார் - இலங்கையின் தலையெழுத்தை மாற்றுமா?
தமிழர் தாயகப் பகுதியான மன்னார் கடற்பரப்பில் பெருந்தொகை கனிய வளங்கள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இந்த கனிய வளங்களை பயன்படத்துவதுடன் மூலம் இலங்கையின் முழு கடனையும் அடைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்னார் பேசாலைப் பகுதியில் எம் -2 என அழைக்கப்படும் காவிரி பள்ளத்தாக்கில் 2,000 மில்லியன் பீப்பாய்கள் கனிய எண்ணெய் வளம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்.
குறித்த பகுதியில் 09 டிரில்லியன் கன அடி எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 17 பில்லியன் அமெரிக்க டொலர் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எனவே இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனையிலிருந்து எமக்கு 167 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட முடியும்.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் தற்போது 47 பில்லியன் அமெரிக்க டொலருக்கு கடன்பட்டிருப்பதாகவும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மன்னார் பேசாலை கனிய எண்ணெய் வளம் மற்றும் எரிவாயுவை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தினாலும் 133.5 பில்லியன் அமெரிக்க டொலரை மீதப்படுத்தலாம் என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு வளங்களை ஆய்வு செய்வது ஒரு முக்கியமான தருணத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் பெட்ரோலிய அபிவிருத்திச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பெட்ரோலிய அபிவிருத்தி ஆணைக்குழு இதற்காக அமைக்கப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஊடாக குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        