மன்னார் - திருக்கேதீஸ்வரம் மஹா சிவராத்திரி பெருவிழா.. முன்னாயத்த நடவடிக்கைகள் ஆரம்பம்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெற உள்ள மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தரவுள்ளனர்.
இதனால் பக்தர்கள் நலன் கருதி சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாயத்த கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) காலை சிவராத்திரி நிகழ்வையொட்டி முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
முக்கிய விடயங்கள்..
இதில் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் மேலதிக அரசாங்க அதிபர்கள், பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
எனவே இது திருவிழாவை முன்னிட்டு இதனை மிகவும் சிறப்பான முறையில் நடாத்துவதற்காக இவ் ஆலயத்திற்கு வரும் பொது மக்களின் தேவையான வசதிகளையும் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினர் திணைக்களத் தலைவர்கள் மற்றும் திருக்கேதீஸ்வர கோவில் தரப்பினருடன் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் விசேட கூட்டம் நடைபெற்றது.
பக்தர்களின் பங்கேற்பு
வருகின்ற பக்தர்களுக்கு தேவையான வசதிகள் சுகாதாரம், மின்சாரம், நீர் விநியோகம் வருகை தரும் அடியார்களுக்கு உணவு வழங்கல்,பாதுகாப்பு இவற்றுடன் பாலாவி தீர்த்தம் தொடக்கம் நடைபெற இருக்கும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளும் போது ஏற்படுகின்ற ஒழுங்கு முறைகளை மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு, பாதுகாப்பு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

பொலிஸாரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக முப்படைகளின் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. கடந்த வருடத்தை போன்று இந்த வருடம் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த சிவராத்திரி விழாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆகவே இதற்கேற்றவாறு தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைகளும் இணைந்து கூட்டு போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன், வழிபாடுகள் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர திருத்தலத்தின் மகா சிவராத்திரி பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி சிறப்பாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் முதலாவது கலந்தாய்வுக் கூட்டம் இன்று (27) காலை 09.30 மணிக்கு மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் . க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் மகா சிவராத்திரி பெருவிழா ஒழுங்குமுறை யுடனும் பாதுகாப்பாகவும் பக்தர்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாத வகையிலும் நடத்தப்படுவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.




மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam