மன்னார் - தள்ளாடி வீதியில் மீனுடன் வந்த வாகனம் விபத்து: சாரதி படுகாயம் (Photos)
மன்னார் - தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றி வந்த மகேந்திரா ரக வாகனம் வீதி அருகில் காணப்படும் வீதியோர தடையில் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (19.10.2023) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் - தள்ளாடி ஊடாக பேசாலைக்கு பல ஆயிரக்கணக்கான கிலோ மீன் மற்றும் திருக்கை மீனுடன் பயணித்த மகேந்திரா ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீதியோர தடையில் மோதி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்நிலையில், வாகனத்தில் இருந்த பல ஆயிரக்கணக்கான கிலோ மீன்கள் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான வாகன சாரதி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காணாமல்போன புத்தர் சிலையை கேட்டு அடம் பிடிக்கும் அம்பிட்டிய தேரர் : மட்டக்களப்பில் பொலிஸார் குவிப்பு
மேலதிக செய்திகள் : ஆஷிக்











எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
