மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு.. முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
மன்னார் பேசாலை வெற்றி சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில்,பேசாலை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (25) காலை இரத்ததான முகாம் இடம் பெற்றது.
காலை 9 மணி தொடக்கம், மாலை 4 மணி வரை குறித்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
வைத்தியசாலையின் கோரிக்கை
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைவாகவும்,மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலும் குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த இரத்ததான முகாமில் பேசாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் உள்ளடங்களாக சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
குறிப்பாக பேசாலை பகுதியை சேர்ந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் இரத்த தானம் செய்தனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் வைத்தியர்கள் இணைந்து குறித்த இரத்ததான முகாமை சிறப்பாக முன்னெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.







விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam