மன்னாரிலுள்ள பொது மயானத்தை ஆக்கிரமிக்கும் இலங்கை அரசாங்கம் : பொதுமக்கள் குற்றச்சாட்டு
மன்னார் - நாகதாழ்வு பகுதியில் உள்ள பொது மயானத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பொது மயானமானது, ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தின் போது இலங்கையின் வனவிலங்கு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், யுத்தம் முடிவடைந்த போதிலும் மயானம் இன்னும் கிராமத்துக்கு வழங்கப்படவில்லை.
சிரமத்தில் மக்கள்
இந் நிலையில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக வெற்று நிலங்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், கடந்த வாரம் மன்னாரில் உள்ள தமிழர்கள் கொட்டும் மழையின் போது வெற்று நிலத்தில் இறுதி சடங்குகள் மற்றும் சடங்குகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |